முதல்வர் நிகழ்ச்சி ஏற்பாடு: அமைச்சர் பொன்முடி ஆய்வு
விழுப்புரம்,; விழுப்புரத்தில் முதல்வர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகளை, அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில், வரும் 27, 28 தேதிகளில், முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்கிறார். விழுப்புரம் வழுதரெட்டியில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு அரங்கம், சமூகநீதி போராளிகள் மணி மண்டப திறப்பு விழா, வரும் 28ம் தேதி காலை நடைபெறுகிறது. தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை பணியை, அமைச்சர் பொன்முடி, நேற்று பார்வையிட்டார்.லட்சுமணன், எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், தி.மு.க., நகர செயலாளர் சக்கரை மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.