குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சேர்மன் அஞ்சுகம் கணேசன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ஜோதி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல ஆலோசகர் முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர், குழந்தைகள் பாதுகாப்பு, அன்பு கரங்கள் திட்டங்கள், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்பு, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் குழந்தைகள் சேவை மைய எண் 1098; பெண்கள் உதவி எண் 181; காவல்துறை 100; முதியோர் ஹெல்ப்லைன் 14567; சைபர் குற்றங்கள் 1930; ஆகிய எண்களை பயன்படுத்தி தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என, கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.