டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய குடிமகன் கைது
விழுப்புரம்; விழுப்புரத்தில், கடனாக மது பாட்டில் தர மறுத்த டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கிய குடிமகனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த மாம்பழபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி, 50; விழுப்புரம் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளர். இவர், நேற்று முன்தினம் பணியிலிருந்த போது, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார், 45; கடனாக மதுபாட்டில் கேட்டுள்ளார்.தர மறுத்த மாசிலாமணியை, பணியை செய்ய விடாமல் தடுத்து திட்டி, தாக்கினார். டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் காமராஜன், அளித்த புகாரின் பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.