உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டுடன் வழிபாடு

பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்டுடன் வழிபாடு

விழுப்புரம் : பத்தாம் வகுப்பு மாணவர்கள், ஹால்டிக்கெட்டுடன், அரசமங்கலம் பெருமாள் கோவிலில் வழிபட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் 28ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்காக, பள்ளி மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் நேற்று ஹால் டிக்கெட்டுடன், அரசமங்கலம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் வழிபட்டனர். பட்டாச்சாரியார்கள் பூஜை செய்து, மாணவ, மாணவிகளை வாழ்த்தி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை