தூய்மை பணிகள் முகாம்
விக்கிரவாண்டி: பனையபுரத்தில் சிறப்பு துாய்மை பணிகள் முகாமை ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தார். விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் துாய்மை பாரதம் இயக்கம் சார்பில், தூய்மையே சேவை முகாம் கடந்த 17ம் தேதி துவங்கி, வரும் அக்.2 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் பனையபுரத்தில் நடந்த முகாமை, ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவி துரை தலைமை தாங்கி துாய்மை சேவை பணியை துவக்கி வைத்தார். மேலும், மரக்கன்றுகளை நட்டு, துாய்மை பணியாளர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பேசினார். பி.டி.ஓ.,க்கள் சையது முகமது, நாராயணன், ஒன்றிய பொறியாளர் குமரன், மண்டல துணை பி.டி.ஓ., பாபு, பணி மேற்பார்வையாளர் விஜயராகவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிதுரை, ஊராட்சி மன்ற தலைவர் காந்த ரூபி வேல்முருகன், துணைத் தலைவர் கலா முருகன் மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.