அரசு கல்லுாரியில் ஆடை கண்காட்சி
வானுார்: வானுார் அரசு கல்லுாரியில் ஆடை கண்காட்சி நடந்தது. மாணவர்களின் கலை திறனை ஊக்குவிக்கும் விதமாக நடந்த கண்காட்சியில், மாணவர்கள் பல்வேறு ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர். விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி கணிதத்துறை உதவி பேராசிரியர் அருள்மணி நடுவராக பங்கேற்று சிறந்த கண்காட்சியை தேர்வு செய்தார். கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்களை கல்லுாரி முதல்வர் வில்லியம் பாராட்டினார். கலை திருவிழா ஒருங்கிணைப்பாளர் தேவநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக உதவி பேராசிரியர்கள் குணசேகரி, அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் ஆகியோர் செயல்பட்டனர்.