உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூட்டுறவு பணியாளர்கள் கோரிக்கை விளக்க கூட்டம்

கூட்டுறவு பணியாளர்கள் கோரிக்கை விளக்க கூட்டம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் நியாய விலை கடைளில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்று முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர்.ரேஷன் கடைகளுக்கு அனுப்படும் பொருட்களில் இருப்பு குறைவிற்கான அபராத தொகையை இரு மடங்காக உயர்த்தியது, புதியதாக நியமனம் செய்யப்பட்ட ரேஷன் கடை விற்பனையாளர்கள் உள்ளிட்டவர்களை சொந்த ஒன்றியங்களில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.இதேபோல் திண்டிவனம் கிடங்கல்(1) பகுதியிலுள்ள மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் நேற்று காலை கோரிக்கை விளக்க கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் அனந்தசயனம் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ