மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி
08-Nov-2025
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு செய்தார். விழுப்புரம் நகராட்சி 9 வது வார்டு வடக்குத்தெரு, மணிமேகலை தெரு மற்றும் கந்தசாமி லே-அவுட் ஆகிய பகுதிகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் முருகேசன், நகராட்சி கமிஷனர் வசந்தி, தாசில்தார் மகாதேவன் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.
08-Nov-2025