மேலும் செய்திகள்
திருநங்கைகளுக்கு கல்வி சிறப்பு முகாம்
15-Jun-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் திருநங்கைகளும் தமிழ் புதல்வன் திட்டத்தில் பயன்பெற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழகத்தில் திருநங்கைகள் மற்றும் இடைபாலினர் எந்த வகையான பள்ளிகளில் படித்திருந்தாலும், அவர்கள் உயர்கல்வி பயிலும்போது, அவர்களும் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டங்களில், மாதம் 1000 ரூபாய் பெற்று பயனடையலாம்.இத்திட்டத்தில் பயன்பெற அனைத்து திருநங்கையர்களும், தங்களது உயர்கல்வி பயிலும் நிறுவனங்களின் முலம் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.மேலும், விழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம், திருநங்கைகளின் கல்வி கனவை நிறைவேற்ற உயர்கல்வி பயில்வோருக்கு கல்விக் கட்டணம் அனைத்தும் அரசே ஏற்கும்.எனவே, இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினர் உள்ளிட்ட அனைவரும் திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை சான்றை சமர்ப்பித்து, இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
15-Jun-2025