உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே காணை ஒன்றியத்தில் நேற்று சென்ற கலெக்டர் ஷேக் அப்துல்ரஹ்மான், காங்கியனூரில் அங்கன்வாடி மையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் கீழ் இயங்கி வரும் அந்த அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். குழந்தைகள் வருகைப்பதிவேடு, உணவு வழங்கும் பதிவேடுகள், குழந்தைகளின் ஊட்டச்சத்தை கண்காணிக்கும் பதிவேடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டதுடன், அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் வயதிற்கேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து விசாரித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை முறையாக வழங்கி, குறைபாட்டினை போக்கிட வேண்டும். அங்கன்வாடி மையத்திற்கு வராத குழந்தைகளின் பெற்றோரை நேரில் சந்தித்து, குழந்தைகளை தொடர்ந்து அனுப்ப விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு வாரந்தோறும் மூன்று முட்டைகள் மற்றும் நாள்தோறும் உணவில் காய்கறிகள், கீரைகள் சமைத்து வழங்க வேண்டும் என்று, அங்கன்வாடி பணியாளர்களிடம், அறிவுறுத்தினார். ஆய்வின்போது, காணை பி.டி.ஓ., சிவனேசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை