முதல்வர் மருந்தகங்களில் கலெக்டர் ஆய்வு
செஞ்சி; செஞ்சி, அப்பம்பட்டில் முதல்வர் மருந்தகங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று செஞ்சி காந்தி பஜார், திருவண்ணாமலை ரோடு மற்றும் கோணை ஊராட்சி அப்பம்பட்டில் உள்ள முதல்வர் மருந்தகங்களில் ஆய்வு செய்தார்.மருந்தகங்களின் செயல்பாடு, விற்பனை விவரங்களை கேட்டறிந்தார். அங்கு வந்த பொது மக்களிடம் தேவைப்படும் பிற மருந்துகள் குறித்தும், மருந்தகத்தின் பயன்பாடு எவ்வாறு உள்ளது என்றும் கேட்டறிந்தார்.ஆய்வின் போது விழுப்புரம் சரக துணைப்பதிவாளர் சிவப்பழனி, கூட்டுறவு சார்பதிவாளர் கண்ணன், தாசில்தார் ஏழுமலை, கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் பழனிகுமார், திருநாவுக்கரசு உடன் இருந்தனர். விழுப்புரம்
தொடர்ந்து, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு, ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தி, மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை நிலைய அலுவலர் ரவிக்குமார் உட்பட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள முதல்வர் மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை மற்றும் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம், கலெக்டர் கேட்டறிந்தார்.