அரசு மருத்துவ கல்லுாரியில் கலெக்டர் ஆய்வு
விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நேற்று மாலை வந்தார். அங்குள்ள போதை சிகிச்சை மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார்.பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், காத்திருப்போர் கூடத்தை பார்வையிட்டு, பொதுமக்களிடம் மருத்துவமனை செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, தாசில்தார் செல்வமூர்த்தி, கல்லுாரி டீன் கீதாஞ்சலி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் கணேஷ்குமார், மனநல மருத்துவ துறை தலைவர் புகழேந்தி, ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன், துறை டாக்டர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் உடனிருந்தனர்.