உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருநங்கைகளுக்கு வீடுகட்டும் ஆணை; விழுப்புரத்தில் கலெக்டர் வழங்கல்

திருநங்கைகளுக்கு வீடுகட்டும் ஆணை; விழுப்புரத்தில் கலெக்டர் வழங்கல்

விழுப்புரம் : சேமமங்கலம் கிராம திருநங்கைளுக்கு, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணையை கலெக்டர் ஷேக்அப்துல் ரஹ்மான் வழங்கினார்.அப்போது கலெக்டர் கூறியதாவது; விழுப்புரம் மாவட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 2024-25ம் ஆண்டில் 13 ஒன்றியங்களில் 3,500 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் செஞ்சியில் 437 வீடுகளும், காணையில் 453, கண்டமங்கலத்தில் 402 வீடுகள், கோலியனுாரில் 440 வீடுகள், மயிலத்தில் 450, மேல்மலையனுாரில் 300, மரக்காணத்தில் 347, முகையூரில் 500, ஒலக்கூரில் 440, திருவெண்ணெய்நல்லுாரில் 500 வீடுகளும், வல்லத்தில் 380, வானுாரில் 401, விக்கிரவாண்டியில் 450 வீடுகள் என மொத்தம் ,5500 வீடுகள் ஒதுக்கீடு செய்து, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதிற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. தற்போது திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம், சேமமங்கலம் ஊராட்சியை சேர்ந்த 4 திருநங்கைளுக்கு தலா ரூ.3.56 லட்சம் வீதம் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது என தெரிவித்தார். ஆணையை பெற்ற திருநங்கைகள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி