மேலும் செய்திகள்
குறைகேட்பு கூட்டம் 626 மனுக்கள் குவிந்தன
01-Oct-2024
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டத்தில் 498 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கி மனுக்களை பெற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைகேட்புக் கூட்டத்தில், பெரும்பாலும், இலவச வீட்டுமனை, ஸ்கூட்டர் போன்றவை அதிகம் கேட்டுள்ளனர். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியுள்ளவர்களுக்கு உடனுக்குடன் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார். இக்கூட்டத்தில், 498 மனுக்கள் பெறப்பட்டது.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, சப் கலெக்டர் முகுந்தன், கலால் உதவி ஆணையர் முருகேசன், ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் ஹமீது, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.
01-Oct-2024