உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  தமிழக முதல்வர் வருகை இடம் தேர்வு செய்யும் பணி கலெக்டர், எஸ்.பி., ஆய்வு 

 தமிழக முதல்வர் வருகை இடம் தேர்வு செய்யும் பணி கலெக்டர், எஸ்.பி., ஆய்வு 

திண்டிவனம்: முதல்வர் வருகைக்காக திண்டிவனத்தில் உள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை கலெக்டர், எஸ்.பி., பார்வையிட்டனர். முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ள அரசு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் புதியதாக கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனை, நகராட்சி பஸ் நிலையம் ஆகியவற்றை திறந்து வைக்க உள்ளார். முதல்வர் பங்கேற்க உள்ள நிகழ்ச்சிக்கான தேதி விரைவில் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது. இதற்கிடையே திண்டிவனம் பகுதியில் நடைபெறும் விழாவில், முதல்வர் பங்கேற்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, திண்டிவனம் - மயிலம் சாலையில் உள்ள வக்பு வாரியத்திற்கு சொந்தமான காலி மைதானத்தை கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் எஸ்.பி., சரவணன், சப் கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். விழுப்புரம் வடக்கு மா வட்ட செயலாளர் மஸ்தான், துணைச் செயலாளர் ரவிக்குமார், திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை