மேலும் செய்திகள்
கல்லுாரி மாணவி மாயம்
31-May-2025
செஞ்சி : கல்லுாரி மாணவி காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் சுபாஷினி, 19; இவர், விழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு கல்லுாரிக்கு சென்ற சுபாஷினி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் அவரது தந்தை சுந்தரம் அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
31-May-2025