உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லூரி மாணவி மாயம்

கல்லூரி மாணவி மாயம்

கோட்டக்குப்பம்: கல்லூரி மாணவி காணாமல் போனதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.மரக்காணம் தாலுகா கீழ்புத்துப்பட்டு கெங்கை நகரை சேர்ந்தவர் ஜானகிராமன் மகள் சாதனா, 19; புதுச்சேரி தனியார் கல்லூரியில் பிசியோதெரபி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மழையின் காரணமாக கடந்த 3ம் தேதி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.அன்று காலை அவரது தந்தை ஜானகிராமன் வேலைக்கு சென்று விட்டார். பின் வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த சாதனாவை காணவில்லை. இது குறித்து அவரது தந்தை ஜானகிராமன் கொடுத்துள்ள புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை