உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கல்லுாரி மாணவி மாயம்

கல்லுாரி மாணவி மாயம்

வானுார் : கல்லுாரிக்குச் சென்ற மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.வானுார் அடுத்த வாழப்பட்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகள் ராகவி, 18; வானுார் அரசு கலை கல்லூரியில் பி.காம்., 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்ற ராகவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை செல்வம், ஆரோவில் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை