மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கலெக்டர் ஆபீசில் மக்கள் தர்ணா
7 hour(s) ago
அழகியநாதேஸ்வரர் கோவிலில் பாலாலயம்
7 hour(s) ago
கார் திருட்டு : போலீஸ் விசாரணை
7 hour(s) ago
வி ழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில் அமைச்சர் பிரதிநிதித்துவமில்லாத நிலையில், தேர்தலை முன்வைத்து மஸ்தானுக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தி.மு.க.,வில், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு, செஞ்சி, திண்டிவனம், மயிலம் சட்டசபை தொகுதிகளை ஒருங்கிணைத்து, வடக்கு மாவட்ட செயலாளராக மஸ்தான் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் அடிப்படையில் அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. மாஜி அமைச்சர் பொன்முடி ஆதரவாளர்களால் மஸ்தானுக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. அவர்கள், திண்டிவனத்தில் நேரடியாகவே எதிர்ப்பை தெரிவித்து கோஷ்டி அரசியல் செய்து வருகின்றனர். திண்டிவனம் நகர மன்றத்திலும், மஸ்தானுக்கு எதிராக தி.மு.க., கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கினர். மஸ்தானின் மகன், மருமகன் என உறவினர்கள் ஆதிக்கம், உட்கட்சியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால் அவரது பதவிகள் மட்டுமின்றி அவரது உறவினர்களின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டது. ஆனாலும், கோஷ்டி எதிர்ப்புகளை சமாளித்து, வடக்கு மாவட்டத்தில் தீவிர கட்சி பணியும், கட்சி தலைமை மீது மரியாதையும், தாராள செலவிடும் குணமும் காரணமாக, நீண்ட போராட்டத்துக்கு பிறகு மஸ்தானுக்கு மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் வழங்கப்பட்டது. அதற்குள், திண்டிவனம், செஞ்சி நிர்வாகிகள் சிலர், தலைமைக்கு நெருக்கம் ஏற்படுத்திக்கொண்டு, சீட் பெறும் நோக்கில் செயலாற்றி வருகின்றனர். தற்போது மஸ்தான், மீண்டும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்துள்ள நிலையில், வரும் தேர்தலில் அவருக்கு சீட் கொடுப்பார்களா என்ற சந்தேகத்தை கட்சியினர் எழுப்புகின்றனர். கட்சி தலைமையின் நெருக்கத்தில் உள்ள சிவா, மாஜி எம்.எல்.ஏ., கண்ணன் மகன் ஆனந்த், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சேதுநாதன், மாசிலாமணி ஆகியோருக்கு, செஞ்சி, மயிலம் தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், மஸ்தானுக்கு வாரிய தலைவர் கொடுத்து சரி கட்டுவார்கள் என பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாஜி அமைச்சர் பொன்முடியின் பதவி பறிக்கப்பட்டு, தேர்தலை முன்வைத்து, ஒரு வழியாக மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள மஸ்தானுக்கும் வாரிய தலைவர் பதவி தரப்படலாம் என ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago