உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

 சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

விழுப்புரம்: விழுப்புரத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பஸ் நிலையம், புற காவல் நிலையத்தில் பணி புரியும் ஏட்டு ராஜசேகர், கடந்த 20ம் தேதி பணியில் இருந்தபோது, திருவண்ணாமலை பஸ்கள் நிற்கும் தடத்தில், சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிறுவனை அழைத்து சோதனை மேற்கொண்டதில், அவனிடம் 350 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுவனை போலீசார் கைது செய்தனர். இதே போல், நெடுஞ்சாலை ரோந்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், பணியிலிருந்தபோது அசோகபுரி பகுதியில் டிப்பர் லாரியில் மணல் கடத்திய நபரை மடக்கி பிடித்து கைது செய்தார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், ஏட்டு ராஜசேகர் ஆகியோரை எஸ்.பி., சரவணன் நேரில் அழைத்து, பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்