தீபாவளி சீட்டு நடத்தி மோசடி எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
விழுப்புரம், : தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி, பாதிக்கப்பட்டவர்கள் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், களமருதுாரை சேர்ந்த கண்ணன் உள்பட சிலர், நேற்று விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு;கடந்த 2022ம் ஆண்டு திருவெண்ணெய்நல்லுாரில் இயங்கிய துணிக்கடை ஒன்றில் தீபாவளி சீட்டிற்கு மாதம் 1,000 வீதம் 11 மாதங்கள் 11,000 ரூபாய் ஒரு நபர் கட்டினால், 2023ம் ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரம் முன்னதாக கட்டிய தொகைக்கு நகை மற்றும் பொருட்களாக தருவதாக, அதன் உரிமையாளர்கள் விளம்பரம் செய்தனர்.களமருதுார் மற்றும் பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர்கள் 15 பேரிடம் மாதந்தோறும் சீட்டு தொகை வசூ லித்து கொடுத்து கட்டி னோம். 2023ம் ஆண்டு நவம்பர் வரை மொத்த தொகை கட்டிய நிலையில், 15 பேருக்கு கட்டிய தொகைக்கான நகை, பணம் தரவில்லை. நாங்கள் கேட்டதற்கு, சீட்டு போட்ட உரிமையாளர், 3 மாதங்கள் கழித்து பணத்தை தருவதாக கூறியதன் பேரில், திரும்பி வந்து விட்டோம்.பின், 15 பேர் கட்டிய 1,65,000 தொகையை கடந்த 19ம் தேதி நாங்கள் கேட்ட போது, துணிக்கடை உரிமையாளர் எங்களை மிரட்டினார். எனவே, ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதர வேண்டும்' என தெரிவித்தனர்.