உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மருத்துவமனையில் கணினி பழுது

அரசு மருத்துவமனையில் கணினி பழுது

விக்கிரவாண்டி: அரசு மருத்துவமனையில் கணினி பழுதால் நோயாளிகள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நாள்தோறும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். தற்போது மருத்துவமனையில் அனைத்து பிரிவு கணினி களும் பழுதுடைந்து, செயல் படாமல் உள்ளன. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவதிக் குள்ளாகின்றனர். கடந்த ஒரு வார காலமாக புறநோயாளிகள் பிரிவிலுள்ள, 4 கணினிகளும் பழுதான நிலையில், நோயாளிகள் பதிவை ஒரே ஒருவர் மட்டும் எழுதி தருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டு கின்றனர். மேலும், 24 மணி நேரமும் செயல்படுகின்ற அவசர சிகிச்சை பிரிவிலுள்ள ஒரே ஒரு கணினியும் பழுதாகி உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பாதிப்பிற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த மருத்துவ கல்லுாரி மற்றும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ