மேலும் செய்திகள்
மயிலம் கல்லுாரியில் கருத்தரங்கம்
13-Sep-2025
மயிலம் : பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ் துறை சார்பில் 'கணினித்தமிழ் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சேகர் அறிமுகவுரையாற்றினார். மாணவி அபிநயா வரவேற்றார். சென்னை, தண்டலம் சவீதா பல்கலைக்கழக தமிழ்த்துறை இணை பேராசிரியர் செல்வகணபதி 'கணினித்தமிழ்' தலைப்பில் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில், விழுப்புரம் மாநில தமிழ் இலக்கிய சாரல் தலைவர் பழனி மற்றும் பாதிராப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் பஞ்சாட்சரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
13-Sep-2025