சிலம்பம் போட்டியில் வெற்றி மாணவிக்கு பாராட்டு
விழுப்புரம் : மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற விழுப்புரம் மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது. திருச்சி சேஷ ஐயங்கார் நினைவு மேல்நிலைப் பள்ளியில், மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. ஸ்ரீசெங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் குமரேசன் தற்காப்பு கலைக் கூடம் சார்பில் நடந்த போட்டிகளில், 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில், விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளி 7ம் வகுப்பு மாணவி தீக்ஷாவிற்கு முதலிடம் பிடித்தார். பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தாளாளர் சோழன், பாராட்டி பரிசு வழங்கினார். பயிற்சியாளர் அசோக்குமார், தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரித்விராஜ் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.