உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குண்டு எறிதல் போட்டி வென்றவருக்கு பாராட்டு 

குண்டு எறிதல் போட்டி வென்றவருக்கு பாராட்டு 

திண்டிவனம்:மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குண்டு எறிதல் போட்டியல், திண்டிவனம் அரசு கல்லுாரி கவுரவ பேராசிரியர் முதல் இடத்தை பிடித்தார். முதல்வர் கோப்பை மாற்று திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டி,a விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில், மாவட்டத்திலிருந்து 10க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரியில் பணிபுரியும் இயற்பியல் துறை கவுரவ உதவி பேராசிரியர் சுரேஷ் மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றார். வெற்றி பெற்ற உதவி பேராசிரியருக்கு, கல்லுாரி முதல்வர் நாராயணன் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, இயற்பியல் துறை தலைவர் லதா, உதவி பேராசிரியர் கோகுல்குமார், உடற்கல்வி இயக்குனர் சிவராமன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை