மேலும் செய்திகள்
தவறி விழுந்த கொத்தனார் சாவு
05-Jun-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் கட்டட பணியின் போது தவறி விழுந்து காயமடைந்த கட்டட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.விழுப்புரம் அடுத்த மேல்காரணை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் மும்மூர்த்தி,55; கட்டட மேஸ்திரி. இவர், விழுப்புரம் - திருவாமத்துார் சாலையில் புதிதாக கட்டும் திருமண மண்டப கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார். நேற்று முன்தினம் சாரத்தில் நின்றிருந்தபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தார். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மும்மூர்த்தி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
05-Jun-2025