உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் வளர்ச்சிப்பணி குறித்த கலந்தாய்வு கூட்டம்

 அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் வளர்ச்சிப்பணி குறித்த கலந்தாய்வு கூட்டம்

விழுப்புரம்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக, விழுப்புரம் தலைமை அலுவலகத்தில், வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது, கூட்டத்திற்கு, மேலாண் இயக்குநர் குணசேகரன் தலைமை தாங்கினார். விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலுார், வேலுார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம மற்றும் திருவள்ளூர் மண்டல அலுவலர்கள் மற்றும் கிளை மேலாளர்கள் அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் மேலாண் இயக்குநர் பேசுகையில், 'பாதுகாப்பான பஸ் இயக்கம், வருவாய் பெருக்கம், டீசல் சிக்கனம், முறையாக உதிரி பாகங்கள் கொள்முதல், ஆண்டு கணக்குகள் உள்ளிட்டவைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். போக்குவரத்து கழக வளர்ச்சிக்காக மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பாதுகாப்பான பஸ் இயக்கம், விபத்தில்லா பயணம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு வளர்ச்சியை நோக்கி பணியாற்றிட வேண்டும்' என்றார். தொடர்ந்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் 50 ஆண்டு நிறைவு செய்ததையொட்டி, விழுப்புரம் தலைமை அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்ட பூங்காவினை, மேலாண் இயக்குநர் திறந்து வைத்தார். மேலும் கோட்டத்திலுள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பொன்விழா நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முதன்மை நிதி அலுவலர் அனுஜா, பொதுமேலாளர்கள் ரவீந்திரன் (தொழில்நுட்பம்), ஜெகதீஷ், ஸ்ரீதர், பெனட்ராஜன், கிருஷ்ணமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், முதுநிலை துணைமேலாளர் துரைசாமி (மனிதவளம்) மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை