ஆலோசனை கூட்டம்
விழுப்புரம்; விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள், தேர்தல் பணிக்கு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருக்கோவிலுாரில் நடந்த கூட்டத்திற்கு, தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கி, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தலைமைக் கழக வழக்கறிஞர் சுரேஷ், தேர்தல் பார்வையாளர் கார்த்திகேயன், துணை சேர்மன் தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் பக்தவத்சலு, ராஜசேகர், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், விசுவநாதன், பிரபு, லுாயிஸ், பேரூராட்சி செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, கணேசன் உட்பட தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.