ஆலோசனை கூட்டம்
வானூர்: வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடந்தது. உதவி தேர்தல் அலுவலர் ராஜ் தலைமை தாங்கினார். தாசில்தார் வித்யாதரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்., வி.சி.,பா.ஜ.,பா.ம.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தேர்தல் துணை தாசில்தார் குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.