உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூட்டுறவு நகர வங்கி நிகர லாப காசோலை வழங்கல்

கூட்டுறவு நகர வங்கி நிகர லாப காசோலை வழங்கல்

விழுப்புரம்; விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் நிகர லாப காசோலை, மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தியிடம் வழங்கப்பட்டது.விழுப்புரம் கூட்டுறவு நகர வங்கியின் 2021ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுகள் வரை மூன்று ஆண்டுகளுக்கான நிகர லாபத்தில் கூட்டுறவு வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி 11 லட்சத்து 4,047 ரூபாயக்கான காசோலை வழங்கப்பட்டது.காசோலையை, விழுப்புரம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தியிடம், கூட்டுறவு நகர வங்கி துணை பதிவாளர் ராகினி வழங்கினார்.சரக துணை பதிவாளர் பழனி, இணைப்பதிவாளர் அலுவலக துணை பதிவாளர் சரண்யா, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் விக்ரம், இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் 2 பல்லவராஜ், வங்கியின் பொது மேலாளர் (பொறுப்பு) தண்டபானி, மேலாளர் ஜெயராமன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை