உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மணக்கோலத்தில் தம்பதி மனு

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மணக்கோலத்தில் தம்பதி மனு

செஞ்சி: அனையேரியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மணக்கோலத்தில் தம்பதி மனு அளித்தனர். செஞ்சி ஒன்றியம் அனையேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணை சேர்மன் ஜெயபாலன் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர்கள் ரவி, சீனுவாசன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரை பெட்டகங்களை வழங்கினார். இதில் நேற்று முன்தினம் காலை அனந்தபுரம் சிவன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட முள்ளூர்புதுார் கிராமத்தை சேர்ந்த புதுமண தம்பதி கிருஷ்ணகுமார், கனிஷ்கா ஆகியோர் அரசின் வீடு கட்டும் திட்டத்தில் வீடு வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். அவர்களிடம் மனுவை பெற்று கொண்ட எம்.எல்.ஏ., மஸ்தான், ஆதார் கார்டில் திருத்தம் செய்தல், ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கம், வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்தல் வீடு கட்டும் திட்டத்திற்கு அடிப்படை சான்றிதழ்களை பெற மனு கொடுக்கும்படி கேட்டு கொண்டார். இதில் வரிக்கல், அனையேரி, மேல் அருங்குணம், அத்தியூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை