மேலும் செய்திகள்
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
10-Jan-2025
மயிலம்; பந்தமங்கலம் கிராமத்தில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.தமிழர் திருநாள் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு பரிசளிப்பு விழா பந்தமங்கலம் கிராமத்தில் நடந்தது. விழாவிற்கு பசுமை உலகம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் கண்ணன் தலைமை தாங்கி வெற்றி பெற்ற குழுவினருக்கு பரிசுகளை வழங்கினார்.கிரிக்கெட் விளையாட்டு போட்டியில் பொம்பூர் அணியினர் முதல் பரிசையும், ஆலகிராமம் அணி இரண்டாம் பரிசையும் பெற்றனர். பரிசு பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்களை வழங்கி சிறப்பித்தனர். முடிவில் சதீஷ் நன்றி கூறினார்.
10-Jan-2025