உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பெண்ணிடம் செயின் பறிப்பு 

 பெண்ணிடம் செயின் பறிப்பு 

திண்டிவனம்: இளம் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திண்டிவனம், சுரேஷ் பாண்டியன் நகரை சேர்ந்தவர் சண்முகம் மனைவி கலையரசி, 38; இவர் நேற்று முன்தினம் காலை 7:30 மணியளவில் அதே பகுதியில் நகராட்சி மின் தகன மையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர், கலையரசியின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை அறுத்துக்கொண்டு தப்பினர். கலையரசி கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை