உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலை விபத்தில் இறந்த இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.44 கோடி இழப்பீடு; கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு

சாலை விபத்தில் இறந்த இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.44 கோடி இழப்பீடு; கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு

கடலுார் : விழுப்புரம் அருகே சாலை விபத்தில் இறந்த இன்ஜினியர் குடும்பத்திற்கு 1.44 கோடி ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்க கடலுார் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கத்தை சேர்ந்தவர் சேவகன் மகன் மோகன்குமார், 34; இவர் சென்னையில் ஜூம் இன்போ என்கிற தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 1.7.23ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவனை பஸ் நிறுத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் வந்த லாரி மோதி மோகன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக அவரது தந்தை சேவகன், தாய் சாந்தி, தங்கை ஜெயந்தி, தம்பி நவராஜ் ஆகியோர், கடலுார் சிறப்பு மாவட்ட கோர்ட் எண் 1ல் இழப்பீடு கேட்டு வக்கீல்கள் சந்திரசேகரன், உஷாராணி, கலையரசன், ஆகியோர்கள் மூலமாக வழக்கு தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணை செய்த நீதிபதி ஆனந்தன், இறந்த இன்ஜினியர் குடும்பத்தினருக்கு இழப்பீடாக வட்டியுடன் சேர்த்து 1.44 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி