அரசு பள்ளி மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு
விழுப்புரம்: விழுப்புரத்தில், சைபர் கிரைம் குற்றங்கள், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, சப் இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கலைசெல்வி ஆகியோர், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள், பெருகிவரும் இணையவழி குற்றங்கள், இதனால் ஏற்படும் பாதிப்புகள். இதிலிருந்து கவனத்தோடு இருக்க போதுமான வழிமுறைகள், ஆன்லைன் விளையாட்டு, சமுக வலைதளங்களில் நடக்கும் குற்றங்கள்.போலி ஆப்களில் பெரும் கடன்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு உதவி எண்.1930, cybercrime.gov.inஇணையதளம் குறித்து, போலீசார் விளக்கமளித்து, மாணவிகளுக்கு துண்டு பிரசுங்களை வழங்கினர்.