தாய் திட்டியதால் மகள் தற்கொலை
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் மகள் சுபஸ்ரீ, 17; இவர், சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்தார். நேற்று காலை சுபஸ்ரீயை துணி துவைக்கவும், , சமைக்கவும் அவரது தாய் கூறியுள்ளார். இதில் மனமடைந்த சுபஸ்ரீ புடவையால் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுரேஷ் அளித்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.