உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாய் திட்டியதால் மகள் மாயம்

தாய் திட்டியதால் மகள் மாயம்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே தாய் திட்டியதால் வீட்டிலிருந்து காணாமல் போன மகளை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன் மகள் தேவஸ்ரீ,12; தனியார் பள்ளியில் 7 ம் வகுப்பு பயில்கிறார். இவரை, நேற்று முன்தினம் தாய் ராஜலட்சுமி, சரியாக படிக்கவில்லை என திட்டியுள்ளார். இதனால் கோபித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற தேவஸ்ரீ மீண்டும் வரவில்லை.அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் காணவில்லை. ராஜலட்சுமி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி