உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல் எஸ்.பி., அலுவலகத்தில் புகார்

விழுப்புரம் : கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, கிராம மக்களுடன் எஸ்.பி., அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மனு கொடுத்தார். கண்டாச்சிபுரம் அடுத்த ஒட்டம்பட்டு ஊராட்சி தலைவர் முருகன், 46; இவர் கிராம மக்களுடன், எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் கொடுக்குமாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர். அதன்பேரில், வாய்மொழியாக நான் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தேன். இதனால், எங்கள் கிராமத்தை சேர்ந்த கஞ்சா வியாபாரி குடும்பத்தினர், எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இது குறித்து அரகண்டநல்லுார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து, 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இன்ஸ்பெக்டர், என்னை பயமுறுத்துகிறார். எனவே, இன்ஸ்பெக்டர் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை