உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மரக்காணத்தில் உப்பு தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்

மரக்காணத்தில் உப்பு தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தல்

வானுார் : திருச்சிற்றம்பலம் கூட்டுப் பாதையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18வது மாவட்ட மாநாடு, மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. முன்னதாக பேரணியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் துவக்கி வைத்தார். இதில் சத்தீஷ்குமார் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில பொருளாளர் பாரதி, மாநாட்டை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் அறிவழகன் வேலை அறிக்கையையும், பொருளாளர் தேவநாதன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், எஸ்.எப்.ஐ., மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் மாநாட்டை வாழ்த்தி பேசினர். மாநாட்டில் மாவட்ட தலைவராக பிரகாஷ், மாவட்ட செயலாளராக அறிவழகன், மாவட்ட பொருளாளராக ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயலாளர் சிங்காரவேலன் மாநாட்டை நிறைவு செய்தார். மாநாட்டில், சவுக்கு மரங்களை பயன்படுத்தி மாவட்ட இளைஞர்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் பேப்பர் தொழிற்சாலை துவங்க வேண்டும்; விழுப்புரம் முதல் செங்கல்பட்டு வரை மின்சார ரயில் சேவையை துவக்க வேண்டும்; மரக்காணம் பகுதியில் உப்பு தொழிற்சாலை அமைக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்ட செயலாளர் கலைமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ