மேலும் செய்திகள்
கோவை அரசு கல்லுாரி முன் ஆசிரியர் கழகம் போராட்டம்
07-Aug-2025
விழுப்புரம்: விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், வாயிற்முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் கழக கிளை தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கிளைச் இணைச் செயலாளர் ஜோதிபிரியா முன்னிலை வகித்தார். மாநில கூட்டு நடவடிக்கை குழு உறுப்பினர் விஜயரங்கம், கடலுார் மண்டல செயலாளர் தண்டாயுதபாணி ஆகியோர் பேசினர். இதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; மாற்றுப்பணி வழங்கப்பட்டதில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
07-Aug-2025