உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வக்ப் திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது இப்ராஹிம் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட காஜி முகமது அஸ்ரப்அலி, மாநில துணை தலைவர் முகமதுஅலி, மாவட்ட செயலாளர் அமீர்அப்பாஸ், த.மு.மு.க., மாநில செயலாளர் முஸ்தாக்தீன், மனிதநேய மக்கள் கட்சி மாநில வர்த்தக அணி அப்துல்ஹக்கீம் முன்னிலை வகித்தனர். மஸ்தான் எம்.எல்.ஏ., ரவிக்குமார் எம்.பி., காங்., பேச்சாளர் வேலுச்சாமி, த.வா.க., மாவட்ட செயலர் குமரன், இந்திய கம்யூ., மாவட்ட செயலர் சவுரிராஜன் கண்டன உரையாற்றினர். காணை தலைமை இமாம் அப்துல்சத்தார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி