மேலும் செய்திகள்
தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
17-Sep-2025
விழுப்புரம்: போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் மேரி, மாவட்ட துணைத் தலைவர் கீதா, மாவட்ட செயலாளர் இலக்கியபாரதி, துணைச் செயலாளர் சித்ரா, பொருளாளர் பிரேமா ஆகியோர் கண்டன உரையாற்றினர். உமாமகேஸ்வரி, தமிழரசி, தனலட்சுமி, உமா, ரமணி, காமாட்சி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பெருகி வரும் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பொது மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
17-Sep-2025