உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம் 

விழுப்புரம் : விழுப்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அறிவழகன் கண்டன உரையாற்றினார். தூத்துக்குடி இளைஞர் கவின் படுகொலை சம்பவத்தை கண்டித்தும், தமிழகத்தில் மீண்டும், மீண்டும் அரங்கேறும் சாதிய படுகொலைகள், வருங்காலத்தில் நடக்காமல் தடுக்கும் வகையில், தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் தேவநாதன், வட்ட தலைவர் ஜீவானந்தம், வட்ட செயலாளர் மதன்ராஜ், பொருளாளர் குணா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை