உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

வானுார் : வானுார், பி.டி.ஓ., அலுவலகம் எதிரில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்ட துணை செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். வட்டக்குழு பாலசுந்தரம், சந்திரவர்மன், கிளை துணை செயலாளர் பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் தனஞ்செயன், இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன் ஆகியோர் பேசினர். ஆணைவாரி ஒன்றிய கவுன்சிலர் நாராயணன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ராமசச்சந்திரன், சகாபுதீன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் சந்துரு, மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாசிலாமணி, ஜெயவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் கிளியனுாரில் இயங்கி வரும் ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ