உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துணை முதல்வர் பிறந்த நாள் விழா

துணை முதல்வர் பிறந்த நாள் விழா

செஞ்சி : செஞ்சியில் துணை முதல்வர் உதயநிதியின் 48வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.நகர செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினர். மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை முன்னிலை வகித்தார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார் அன்னதானம் வழங்கி துவக்கி வைத்தார்.பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கர், சிவக்குமார், சீனிவாசன், பொன்னம்பலம், மகாலட்சுமி கமலநாதன், நகர துணைச் செயலாளர் சங்கர், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரசூல் பாஷா, மாவட்ட பிரதிநிதி சர்தார், இளைஞரணி அமைப்பாளர் பழனி, தொண்டரணி அமைப்பாளர் பாஷா பங்கேற்றனர்.

திண்டிவனம்

செஞ்சி ரோட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். கட்சிக் கொடியை மாவட்ட பொருளாளர் ரமணன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், நகர துணைச் செயலாளர் கவுதமன், முன்னாள் நகர துணைச் செயலாளர் அசோக்குமார், நிர்வாகிகள் கோவிந்தராசன், ஏழுமலை, அக்பர்பேக், சேகர், அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழுப்புரம்

காணை கடை வீதியில் நடந்த விழாவிற்கு, தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முருகன், மத்திய ஒன்றிய செயலாளர் ஆர்.பி.முருகன், மாவட்ட கவுன்சிலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் கலைச்செல்வி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்பு வழங்கினார்.ஒன்றிய நிர்வாகிகள் பழனி, ஏழுமலை, மதன், சிவராமன், புனிதா அய்யனார், இளைஞரணி அமைப்பாளர்கள் குமரன், மணியரசன், மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம், விவசாய அணி கணேசன், விளையாட்டு மேம்பாட்டு அணி கலைமணி, மகளிரணி ரெஜினா, தகவல் தொழில்நுட்ப அணி அன்பரசு, கதிரவன், ராகுல் மற்றும் கிளை செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி