உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி பணிகள்: கலெக்டர் ஆய்வு

மரக்காணம்: கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பழைய ஆரோவில் ரோடு பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், 42.50 லட்சம் மதிப்பில் மறுசுழற்சி மையம் அமையும் இடம், சின்ன கோட்டக்குப்பம் பகுதியில் 1.20 கோடி மதிப்பில் நகர்புற ஆரம்ப சுகாதார மையம் கட்டுமானப்பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார். குறிப்பிட்ட காலத்திற்குள் பணியினை முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். முத்துசிங்காரம் நகரில், காலை உணவுத் திட்ட மைய சமையல் கூடத்தினை பார்வையிட்டு, உணவு சமைப்பதற்கான பொருட்களின் இருப்பு மற்றும் சுகாதாரமான முறையில் சமையற்கூடம் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.ஊரகவளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா, வானுார் தாசில்தார் நாராயணமூர்த்தி, கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் புஹேந்திரி, நகராட்சி பொறியாளர் ரவிகுமார், உதவி பொறியாளர் ஆரோக்கியாராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி