உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கத்தி போடும் ஊர்வலம்

ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் பக்தர்கள் கத்தி போடும் ஊர்வலம்

விழுப்புரம் : விழுப்புரம் சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ., காலனி அருகே உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழா கடந்த 17ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் ராமலிங்கம் சவுடேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, நேற்று காலை 6.00 மணிக்கு அம்மன் சக்தி கலச அலங்காரம் மற்றும் பண்டாரி சட்டியோடு நகர்வலம் வருதல், சக்தி அழைத்தல் நடந்தது. பின், சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த பக்தர்கள் வேண்டுதலின் பேரில், தண்டகப்பதிகம் பாடி மார்பில் வாள் தாங்கி சக்தியை அழைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தங்களின் உடலில் கத்தி போட்டவாறு ஊர்வலமாக சென்றனர். அதைத் தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனையும், மாலை ஜோதி மாவு கூட்டுதல், மண்டலாபிஷேகம் துவக்கம், இரவு அம்மன் ஜோதி கலசம், வீதியுலா மற்றும் திருஅமுது படைத்தல், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை