உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தர்மபுரி ஊராட்சி செயலாளர்கள் பரையந்தாங்கலில் பட்டறிவு பயணம்

தர்மபுரி ஊராட்சி செயலாளர்கள் பரையந்தாங்கலில் பட்டறிவு பயணம்

அவலுார்பேட்டை : பரையந்தாங்கல் ஊராட்சியில் நடைபெறும் செயல் திட்டங்களை தர்மபுரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் பட்டறிவு பயணமாக பார்வையிட்டனர். மேல்மலையனுார் அடுத்த ஜனாதிபதியின் பாராட்டை பெற்ற பரையந்தாங்கல் ஊராட்சியில் செயல்திட்டங்களை ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் தருமபுரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள், துணை பி.டி.ஓ.,க்கள் பட்டறிவு பயணமாக நேரில் பார்வையிட்டனர். ஊராட்சி தலைவர் ஏழுமலை வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி ஆகியோர் ஊராட்சியின் சிறப்பு பணிகள் குறித்து விளக்கினர். கட்டமைப்புகள், பதிவேடுகள், நுாலகம், துாய்மைப் பணி, மகிளாசபா, பாலசபா, விளையாட்டு மைதானம், பூங்கா உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். துணைத் தலைவர் ராஜசேகர், வார்டு உறுப்பினர் அருள்தாஸ், துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ