வழுதரெட்டி நடுநிலைப் பள்ளியில் தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
விழுப்புரம்: விழுப்புரம் வழுதரெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும், மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் விரிவான தகவல்களை 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கி வருகிறது. இந்த சிறப்பிதழ், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வெளியா கிறது. விழுப்புரம் வழுதரெட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சரஸ்வதி கல்வி குழுமம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் கதிர் வேல் தலைமை தாங்கினார். ஆசிரியர் அமரேசன் வரவேற்றார். சரஸ்வதி கல்வி குழும தாளாளர் ராஜசேகரன், பொருளாளர் சிதம்பரநாதன், சி.பி.எஸ்.இ., பள்ளி தாளாளர் முத்துசரவணன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கி, அதன் சிறப்புகளை விளக்கி பேசினர்.