தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
செஞ்சி: சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்' பட்டம் இதழ் வினாடி வினா போட்டி நடந்தது. புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ் ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடந்தது. தாளாளர் கவுசல்யா போட்டியை துவக்கி வைத்தார். போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 16 மாணவர்களை தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரித்து, 2 சுற்று போட்டி நடந்தது. இதில் மாணவிகள் ரஞ்சினி, பிரதிக்ஷா, மோகனஸ்ரீ அணி முதல் இடமும், ஹேமலதா, ஷான்வி மிலா அணி இரண்டாம் இடமும் பிடித்தனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் சிவக்குமார் சான்றிதழ் மற்றும் கேடயத்தையும், பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.